Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கேகாலையில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 25 பேர் காயம்!

கேகாலையில் இரு பஸ்கள் நேருக்குநேர் மோதி விபத்து : 25 பேர் காயம்!

கேகாலையில் இரு பயணிகள் பஸ்கள் நேருக்குநேர் மோதியதில் 25 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை (21) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் கேகாலையில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் அனைவரும் கேகாலை மற்றும் வரக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments