Thursday, June 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குடிநீர் தேவைக்கு கடல் நீர் சுத்திகரிப்பு: இலங்கை எதிர்நோக்கவுள்ள அபாயம்

குடிநீர் தேவைக்கு கடல் நீர் சுத்திகரிப்பு: இலங்கை எதிர்நோக்கவுள்ள அபாயம்

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்படும் பட்சத்தில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கடல் நீரை சுத்திகரித்து பயன்படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.

கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேலதிக செயலாளர் கே.ஜி.பி. தர்மதிலக்க இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இம்முறை எதிர்பார்க்கப்படும் எல் நினோ நிலைமை முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையாக இருக்கக்கூடும்.

இதன் தாக்கம் காரணமாக நாடு முழுவதிலும் உள்ள பிரதான நீர்நிலைகள் வற்றிப்போகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்னர் இப்படியொரு எல் நினோ நிலைமையைக் கேள்விப்பட்டதில்லை. இதற்காக நாம் பெருமளவில் தயாராக வேண்டியிருக்கும். பொதுவாக, மழைக்காலத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவ சேவை மையத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு நாடு முழுவதற்கும் எம்மால் நீர் விநியோகம் செய்ய முடியும்.

ஆனால்இ இந்த எல் நினோ நிலைமை ஏற்பட்டால், பெருமளவில் நீரை விநியோகிப்பதற்கு தற்போதுள்ள நீர் விநியோக வாகனங்கள் போதுமானதாக இருக்காது. நீர்நிலைகள் முற்றாக வற்றிப்போகக்கூடும் என்பதால், நீரைப் பெற்றுக்கொள்வதற்குக் கூட மூலாதாதாரங்கள் இல்லாமல் போகலாம். அத்தகைய சூழ்நிலையில்இ கடல் நீரைச் சுத்திகரித்து விநியோகிப்பது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டியிருக்கும்” என தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments