Thursday, June 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கால்பந்து உலகக் கிண்ணம்: போட்டி நேர அட்டவணை முழுவிபரம்

கால்பந்து உலகக் கிண்ணம்: போட்டி நேர அட்டவணை முழுவிபரம்

2026ம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

பிபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இம்முறை 32 அணிகளுக்கு பதிலாக 48 அணிகள் களமிறங்குகின்றன.

இன்று முதல் (ஜூன் 12) ஜூலை 20ம் திகதி வரை கால்பந்து உலகக்கோப்பை நடைபெற உள்ளது.

நியூ ஜெர்சியில் ஜூலை 20ம் திகதி இறுதிப்போட்டி நடக்கிறது.

மொத்தம் உள்ள 48 அணிகள் 12 குழுக்களாக பிரிக்கப்பட்டுஇ ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் 3வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என மொத்தம் 32 அணிகள் அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

உலகக் கோப்பை வரலாற்றில் ‘ரவுண்ட் ஆப் 32’ நாக் அவுட் சுற்று அறிமுகமாவது இதுவே முதல்முறையாகும். 39 நாட்கள் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 104 போட்டிகள் நடக்கவுள்ளன. 48 நாடுகளைச் சேர்ந்த 1248 வீரர்கள் இத்தொடரில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ல் கத்தாரில் நடந்த உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிஇ நடப்பு சாம்பியனாக இத்தொடரில் களமிறங்குகிறது.

பிபா உலகக் கோப்பை 2026: குழுநிலைப் போட்டிகளின் முழு அட்டவணை (இலங்கை நேரப்படி)

வெள்ளிக்கிழமை, ஜூன் 12

குழு ஏ: மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா, நள்ளிரவு 12:30 மணி – மெக்சிகோ சிட்டி

குழு ஏ: தென்கொரியா – செக்கியா, காலை 7:30 மணி – சப்போபன்

சனிக்கிழமை, ஜூன் 13

குழு பி: கனடா – போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, நள்ளிரவு 12:30 மணி – டொராண்டோ

குழு டி: அமெரிக்கா – பராகுவே, காலை 6:30 மணி – லாஸ் ஏஞ்சல்ஸ்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 14

குழு பி: கத்தார் – சுவிட்சர்லாந்து, நள்ளிரவு 12:30 மணி – சாண்டா கிளாரா

குழு சி: பிரேசில் – மொராக்கோ, அதிகாலை 3:30 மணி – நியூ ஜெர்சி

குழு சி: ஹைட்டி – ஸ்காட்லாந்து, காலை 6:30 மணி – பாக்ஸ்பரோ

குழு டி: ஆஸ்திரேலியா – துருக்கி, காலை 9:30 மணி – வான்கூவர்

குழு இ: ஜெர்மனி – குராசாவோ, இரவு 10:30 மணி – ஹூஸ்டன்

திங்கட்கிழமை, ஜூன் 15

குழு எப்: நெதர்லாந்து – ஜப்பான், நள்ளிரவு 1:30 மணி – ஆர்லிங்டன்

குழு இ: ஐவரி கோஸ்ட் – ஈக்வடார், அதிகாலை 4:30 மணி – பிலடெல்பியா

குழு எப்: ஸ்வீடன் – துனிசியா, காலை 7:30 மணி – குவாடலஜாரா

குழு எச்: ஸ்பெயின் – கேப் வெர்டே, இரவு 9:30 மணி – அட்லாண்டா

செவ்வாய்க்கிழமை, ஜூன் 16

குழு ஜி: பெல்ஜியம் – எகிப்து, நள்ளிரவு 12:30 மணி – சியாட்டில்

குழு எச்: சவுதி அரேபியா – உருகுவே, அதிகாலை 3:30 மணி – மியாமி

குழு ஜி: ஈரான் – நியூசிலாந்து, காலை 6:30 மணி – லாஸ் ஏஞ்சல்ஸ்

புதன்கிழமை, ஜூன் 17

குழு ஐ: பிரான்ஸ் – செனகல், நள்ளிரவு 12:30 மணி – நியூ ஜெர்சி

குழு ஐ: ஈராக் – நார்வே, அதிகாலை 3:30 மணி – பாக்ஸ்பரோ

குழு ஜே: அர்ஜென்டினா – அல்ஜீரியா, காலை 6:30 மணி – கன்சாஸ் சிட்டி

குழு ஜே: ஆஸ்திரியா – ஜோர்டான், காலை 9:30 மணி – சாண்டா கிளாரா

குழு கே: போர்ச்சுகல் – காங்கோ ஜனநாயக குடியரசு, இரவு 10:30 மணி – ஹூஸ்டன்

வியாழக்கிழமை, ஜூன் 18

குழு எல்: இங்கிலாந்து – குரோஷியா, நள்ளிரவு 1:30 மணி – ஆர்லிங்டன்

குழு எல்: கானா – பனாமா, அதிகாலை 4:30 மணி – டொராண்டோ

குழு கே: உஸ்பெகிஸ்தான் – கொலம்பியா, காலை 7:30 மணி – மெக்சிகோ சிட்டி

குழு ஏ: செக்கியா – தென்னாப்பிரிக்கா, இரவு 9:30 மணி – அட்லாண்டா

வெள்ளிக்கிழமை, ஜூன் 19

குழு பி: சுவிட்சர்லாந்து – போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, நள்ளிரவு 12:30 மணி – லாஸ் ஏஞ்சல்ஸ்

குழு பி: கனடா – கத்தார், அதிகாலை 3:30 மணி – வான்கூவர்

குழு ஏ: மெக்சிகோ – தென்கொரியா, காலை 6:30 மணி – சப்போபன்

சனிக்கிழமை, ஜூன் 20

குழு டி: அமெரிக்கா – ஆஸ்திரேலியா, நள்ளிரவு 12:30 மணி – சியாட்டில்

குழு சி: ஸ்காட்லாந்து – மொராக்கோ, அதிகாலை 3:30 மணி – பாக்ஸ்பரோ

குழு சி: பிரேசில் – ஹைட்டி, காலை 6:00 மணி – பிலடெல்பியா

குழு டி: துருக்கி – பராகுவே, காலை 8:30 மணி – சாண்டா கிளாரா

குழு எப்: நெதர்லாந்து – ஸ்வீடன், இரவு 10:30 மணி – ஹூஸ்டன்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 21

குழு இ: ஜெர்மனி – ஐவரி கோஸ்ட், நள்ளிரவு 1:30 மணி – டொராண்டோ

குழு இ: ஈக்வடார் – குராசாவோ, அதிகாலை 5:30 மணி – கன்சாஸ் சிட்டி

குழு எப்: துனிசியா – ஜப்பான், காலை 9:30 மணி – குவாடலஜாரா

குழு எச்: ஸ்பெயின் – சவுதி அரேபியா, இரவு 9:30 மணி – அட்லாண்டா

திங்கட்கிழமை, ஜூன் 22

குழு ஜி: பெல்ஜியம் – ஈரான், நள்ளிரவு 12:30 மணி – லாஸ் ஏஞ்சல்ஸ்

குழு எச்: உருகுவே – கேப் வெர்டே, அதிகாலை 3:30 மணி – மியாமி

குழு ஜி: நியூசிலாந்து – எகிப்து, காலை 6:30 மணி – வான்கூவர்

குழு ஜே: அர்ஜென்டினா – ஆஸ்திரியா, இரவு 10:30 மணி – ஆர்லிங்டன்

செவ்வாய்க்கிழமை, ஜூன் 23

குழு ஐ: பிரான்ஸ் – ஈராக், அதிகாலை 2:30 மணி – பிலடெல்பியா

குழு ஐ: நார்வே – செனகல், அதிகாலை 5:30 மணி – டொராண்டோ

குழு ஜே: ஜோர்டான் – அல்ஜீரியா, காலை 8:30 மணி – சாண்டா கிளாரா

குழு கே: போர்ச்சுகல் – உஸ்பெகிஸ்தான், இரவு 10:30 மணி – ஹூஸ்டன்

புதன்கிழமை, ஜூன் 24

குழு எல்: இங்கிலாந்து – கானா, நள்ளிரவு 1:30 மணி – பாக்ஸ்பரோ

குழு எல்: பனாமா – குரோஷியா, அதிகாலை 4:30 மணி – பாக்ஸ்பரோ

குழு கே: கொலம்பியா – காங்கோ ஜனநாயக குடியரசு, காலை 7:30 மணி – சப்போபன்

வியாழக்கிழமை, ஜூன் 25

குழு பி: சுவிட்சர்லாந்து – கனடா, நள்ளிரவு 12:30 மணி – வான்கூவர்

குழு பி: போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா – கத்தார், நள்ளிரவு 12:30 மணி – சியாட்டில்

குழு சி: மொராக்கோ – ஹைட்டி, அதிகாலை 3:30 மணி – அட்லாண்டா

குழு சி: ஸ்காட்லாந்து – பிரேசில், அதிகாலை 3:30 மணி – மியாமி

குழு ஏ: தென்னாப்பிரிக்கா – தென்கொரியா, காலை 6:30 மணி – குவாடலஜாரா

குழு ஏ: செக்கியா – மெக்சிகோ, காலை 6:30 மணி – மெக்சிகோ சிட்டி

வெள்ளிக்கிழமை, ஜூன் 26

குழு இ: குராசாவோ – ஐவரி கோஸ்ட், நள்ளிரவு 1:30 மணி – பிலடெல்பியா

குழு இ: ஈக்வடார் – ஜெர்மனி, நள்ளிரவு 1:30 மணி – நியூ ஜெர்சி

குழு எப்: துனிசியா – நெதர்லாந்து, அதிகாலை 4:30 மணி – கன்சாஸ் சிட்டி

குழு எப்: ஜப்பான் – ஸ்வீடன், அதிகாலை 4:30 மணி – ஆர்லிங்டன்

குழு டி: துருக்கி – அமெரிக்கா, காலை 7:30 மணி – லாஸ் ஏஞ்சல்ஸ்

குழு டி: பராகுவே – ஆஸ்திரேலியா, காலை 7:30 மணி – சாண்டா கிளாரா

சனிக்கிழமை, ஜூன் 27

குழு ஐ: நார்வே – பிரான்ஸ், நள்ளிரவு 12:30 மணி – பாக்ஸ்பரோ

குழு ஐ: செனகல் – ஈராக், நள்ளிரவு 12:30 மணி – டொராண்டோ

குழு எச்: கேப் வெர்டே – சவுதி அரேபியா, அதிகாலை 5:30 மணி – ஹூஸ்டன்

குழு எச்: உருகுவே – ஸ்பெயின், அதிகாலை 5:30 மணி – சப்போபன்

குழு ஜி: நியூசிலாந்து – பெல்ஜியம், காலை 8:30 மணி – வான்கூவர்

குழு ஜி: எகிப்து – ஈரான், காலை 8:30 மணி – சியாட்டில்

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 28

குழு எல்: பனாமா – இங்கிலாந்து, அதிகாலை 2:30 மணி – நியூ ஜெர்சி

குழு எல்: குரோஷியா – கானா, அதிகாலை 2:30 மணி – பிலடெல்பியா

குழு கே: கொலம்பியா – போர்ச்சுகல், அதிகாலை 5:00 மணி – மியாமி

குழு கே: காங்கோ ஜனநாயக குடியரசு – உஸ்பெகிஸ்தான், அதிகாலை 5:00 மணி – அட்லாண்டா

குழு ஜே: அல்ஜீரியா – ஆஸ்திரியா, காலை 7:30 மணி – கன்சாஸ் சிட்டி

குழு ஜே: ஜோர்டான் – அர்ஜென்டினா, காலை 7:30 மணி – ஆர்லிங்டன்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments