Sunday, November 15, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் பரபரப்பு – இரட்டை உளவாளி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்கள்!

கியூபெக்கில் பரபரப்பு – இரட்டை உளவாளி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்கள்!

கியூபெக்கைச் சேர்ந்த இரட்டை உளவாளி ஒருவர், சோவியத் யூனியனின் கேஜிபி (KGB) அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஒருவரின் உதவியுடன் பனிப்போர் காலத்தில் அடையாளம் காணப்பட்ட விபரங்களை வெளிப்படுத்தும் புதிய புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் பென் மெ்கின்டைர் (Ben Macintyre) எழுதியுள்ள “ரெட்வுட்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் தி கோல்ட் வார்ஸ் மோஸ்ட் எக்ஸ்ட்ராடினரி ஸ்பை” (Redwood: The Untold Story of the Cold War’s Most Extraordinary Spy) எனும் புதிய நூலில் இந்தத் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சோவியத் உளவுத்துறையில் பணியாற்றி பின்னர் பிரித்தானியாவிற்காக உளவு பார்த்த விளாடிமிர் குசிச்கின் (Vladimir Kuzichkin) குறித்த இந்த நூல், கனடா மற்றும் கியூபெக் தொடர்பான பல வரலாற்று உண்மைகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவல்களின்படி, கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த புருநெட் (Brunet) என்ற இரட்டை முகவர் சோவியத் ஆதரவுக்காக ரகசியத் தகவல்களைக் கசியவிட்டுள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள சோவியத் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்கும் கருவிகளின் இருப்பிடங்களை வெளிப்படுத்தியதுடன், மாஸ்கோவில் தங்கியிருந்த கனடிய ராணுவ அதிகாரி ஒருவரின் நடவடிக்கைகளையும் இவர் சோவியத்துகளுக்குக் காட்டிக்கொடுத்துள்ளார்.

இதற்காக கேஜிபி அமைப்பிடமிருந்து புருநெட் 700,000 டொலர்களுக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளதாகவும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேஜிபி அதிகாரிகள் புருநெட்டுக்கு சிகரெட் பெட்டிகளில் ஒளிப்படம் எடுக்கும் முறைகள் மற்றும் தூண்களில் ஒட்டப்படும் நாடாக்கள் மூலம் சந்திப்புக்கான சமிக்ஞைகளை அளிப்பது போன்ற உளவுத்துறை உத்திகளைக் கற்பித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பனிப்போர் காலக் கட்டத்தில் கனடாவின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறைக் கட்டமைப்பில் நிகழ்ந்த இந்த ஊடுருவல்கள் குறித்த தகவல்கள் பரவலான அவதானிப்பைப் பெற்றுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments