Sunday, June 7, 2026
spot_img
Homeபொது செய்திகள்கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக பார்த்த கணவன்

கல்லூரி மாணவருடன் ஆசிரியை உல்லாசம்: எதிர்பாராத விதமாக ஜன்னல் வழியாக பார்த்த கணவன்

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினந்தோறும் இரவில் தனது இரால் பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு திரும்புவார்.

இந்த நிலையில் லட்சுமணன் மனைவி நாகலட்சுமி (28) தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கல்லூரியில் படிக்கும் மணிகண்டா (23)என்ற மாணவருடன் நாகலட்சுமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்தது.

மணிகண்டாவும் நாகலட்சுமியும் பலமுறை ரகசியமாக வெளியில் சென்று உல்லாசமாக இருந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமனன் இறால் பண்ணைக்கு சென்றபோது மணிகண்டாவை வீட்டிற்கு வரவழைத்த நாகலட்சுமி தனது 7 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டே இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இரவில் வழக்கம் போல் இறால் பண்ணைக்கு சென்ற லட்சுமணன், மனைவி மீது சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீடு திரும்பி உள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி தூக்கிவாரி போட்டுள்ளது. ஜன்னல் வழியே பார்த்தபோது, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்த லட்சுமணன் கண்கலங்கி போனார். தாலி கட்டிய மனைவியே இப்படி துரோகம் செய்யலாம என கண்ணீர் விட்ட அவர், மனதை கல்லாக்கி கொண்டு வீட்டின் அனைத்து கதவுகளையும் பூட்டிவிட்டு போலீசாருக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக, உள்ளூர் மக்களும் உறவினர்களும் அங்கு வந்தபோது நாகலட்சுமி காதலன் மணிகண்டாவையும் கையும் களவுமாக பிடித்தனர். அப்போது மணிகண்டாவை தாக்க முயன்ற லட்சுமனனை போலீசார் தடுத்து மணிகண்டாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments