Tuesday, September 22, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடிய சந்தைகளிலிருந்து வாபஸ் பெறப்படும் பிரபல அழகுக்கலை பொருட்கள்

கனடிய சந்தைகளிலிருந்து வாபஸ் பெறப்படும் பிரபல அழகுக்கலை பொருட்கள்

கனடாவில் பிரபல அழகுசாதன நிறுவனமான ‘ஸ்வார்ஸ்காஃப்’ பிராண்டின் 90,000-க்கும் அதிகமான ஹேர் மவுஸ் தயாரிப்புகள் சந்தையில் இருந்து அவசரமாகத் திரும்பப் பெறப்படுவதாக கனடிய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹங்கேரியில் தயாரிக்கப்பட்டு, நவம்பர் 2023 முதல் ஜூன் 2026 வரை விற்பனை செய்யப்பட்ட 200 மி.லி கொள்ளளவு கொண்ட ‘Schwarzkopf Professional Osis Grip Mousse’ என்ற தயாரிப்பே இவ்வாறு திரும்பப் பெறப்படுகிறது என கனடிய சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஹேர் மவுஸ் கேன்களின் பொதியிடலில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக, கேனுக்குள் அதிக அழுத்தம் ஏற்படும் போது உள்ளே இருக்கும் திரவம் கசியக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த திரவக் கசிவு மற்றும் அதனால் ஏற்படும் அழுத்தம் காரணமாகக் கேன் வெடித்துச் சிதற வாய்ப்புள்ளது. இதன் மூலம் நபர்களுக்குக் காயங்களோ அல்லது உடைமைகளுக்குச் சேதமோ ஏற்படக்கூடும்” என ஹெல்த் கனடா எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 18 நிலவரப்படி, கனடாவில் இதுதொடர்பாக ஒரு அசம்பாவிதம் மட்டுமே பதிவாகியுள்ளது என்றும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தும் நுகர்வோர்கள் உடனடியாக அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, அதை வாங்கிய இடத்தில் ஒப்படைத்துப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் தகவல்களுக்கு நிறுவனத்தின் skpcanada-support@henkel.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தயாரிப்பால் ஏதேனும் ஆரோக்கியம் அல்லது பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதனை கனடிய சுகாதார நிறுவனத்தின் இணையதளப் படிவம் வழியாகப் புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments