கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் Sea to Sky பகுதியில் தாயை இழந்த கரடிக்குட்டிகள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கரடிக்குட்டிகளைப் பராமரிப்பதில் தங்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாக வனவிலங்கு மீட்பு அமைப்பொன்று தெரிவித்துள்ள நிலையில், கரடிகள் மீது அக்கறை கொண்ட உள்ளூர் மக்கள் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
Britannia Beach பகுதியில் வசிக்கும் டேவிட் சாவோவின் மற்றும் அவரது மனைவி டார்லின் ஆகியோர், கடந்த நவம்பர் 17ஆம் திகதி தமது வீட்டிற்கு அருகில் கரடிக்குட்டியொன்று தனியாக அலைந்து திரிவதைக் கவனித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்களும் கரடிக்குட்டியைப் பலமுறை தனியாகக் கண்டுள்ளனர்.
இந்நிலையில், நவம்பர் 24ஆம் திகதி குறித்த தம்பதியினரின் அயல்வீட்டுப் பெண் ஒருவர், கரடிக்குட்டி தனது வீட்டுத் தோட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் சுமார் ஒரு மணித்தியாலத்தில் அந்தக் கரடிக்குட்டி டேவிட் சாவோவின் வீட்டின் முற்றத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பில் CTV News ஊடகத்திடம் கருத்துத் தெரிவித்த டேவிட் சாவோவின்,
“அந்தச் சிறிய கரடிக்குட்டிகள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவை. அவை உயிர் பிழைத்து வாழ வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அந்தக் கரடிக்குட்டி அன்று மாலை முழுவதும் தங்குவதற்கு இடம் தேடி எமது வீட்டின் முன்புற வராந்தாவில் இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
குறித்த கரடிக்குட்டிகளைப் பாதுகாப்பாக மீட்டு பராமரிப்பதில் உள்ள சிக்கல்கள் தற்போது அப்பகுதி மக்களிடையே கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.


