Sunday, September 13, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்எல் நினோ தாக்கம்: அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ தாக்கம்: அதிகமானோர் பாதிப்பு

எல் நினோ (El Niño) காலநிலை தாக்கத்தின் காரணமாக நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 49,344 குடும்பங்களைச் சேர்ந்த 161,451 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று  வெளியிட்ட அண்மைய தரவு அறிக்கையின்படி, நாடு முழுவதிலும் உள்ள 36 பிரதேச செயலகப் பிரிவுகள் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து குடிநீர் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அதற்கமைய 36 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் வாழும் 43,221 குடும்பங்களைச் சேர்ந்த 141,312 நபர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments