திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் வயது 65 இவரது மகள் பவித்ரா வயது 28. இவருக்கும் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு லிக்திக்ஷா 7, தீதிஷா 5 ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் என்பவர் அந்த பகுதியில் என் டர் பிரைசஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், பவித்ராவிற்கும் அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் பைனான்சியருடன் பவித்ரா உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவரம் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியவர பவித்ராவை கண்டித்துள்ளனர். இதனால் 2 குழந்தைகள் இருப்பதை மறந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு பைனான்சியருடன் சென்றுவிட்டார். அதன்பிறகு அவருடன் சில நாட்கள் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன்பிறகு உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவருக்கு அறிவுரை கூறி விட்டு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் மோகப்பசியால் தவித்து வந்த பவித்ரா உல்லாசத்திற்கு ஆசைப்பட்டு கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த கொத்தனாருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வேலைக்கு வந்த கொத்தனாருடன் பவித்ரா இனிக்க இனிக்க பேசி கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளார். வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கொத்தனாருடன் பவித்ரா உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த விவரம் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் பவித்ராவை கடுமையாக கண்டித்துள்ளனர். 2 குழந்தைகள் உள்ள நிலையில் இது போன்ற விஷயம் ஊருக்கு தெரியவந்தால் நமது குடும்பதிற்கு அவமானம் என அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அதனை எல்லாம் காதில் வாங்கிகொள்ளாமல் இருந்து வந்த பவித்ரா கொத்தனாருடன் இரவில் காதல் ரசம் சொட்ட சொட்ட இரட்டை அர்த்தத்தில் செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று திடீரென பவித்ரா மாயமானார். அவரது செல்போன் ஸ்விட்ச் ஆட் செய்யப்பட்டு இருந்தது. பவித்ரா கொத்தனாருடன் ஓட்டம் பிடித்த விபரம் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவந்ததால் வீட்டில் வந்து விசாரிக்க தொடங்கினர். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பவித்ராவிடம் குடும்பம் வீபரீத முடிவை எடுத்துள்ளது.
மன உளைச்சரில் இருந்த பவித்ராவின் தாய் காளீஸ்வரி தனது பேத்திகள் 2 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். இந்த விவரத்தை தனது தாய் செல்லாம்மாளிடம் கூறவே நானும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறியுள்ளார். நேற்று இரவு தூங்க சென்றபோது காளீஸ்வரி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தங்கள் மனதை கல்லாக்கிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த பேத்திகள் 2 பேரையும் தூக்கில் தொங்கவிட்டனர். அதன்பிறகு தாங்கள் 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். இரவில் எழுந்து பார்த்த பிரபாகரன் தனது குழந்தைகள் மற்றும் மாமியாரை தேடினார். அப்போது அவர்கள் 4 பேரும் ஒரே அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார். பின்னர் இது குறித்து இடையகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


