இலங்கை அணிக்கு எதிரான முதலாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.
ஜமைக்கா – கிங்ஸ்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகப்படியான ஓட்டங்களாக கமிந்து மென்டிஸ் 39 பந்துகளுக்கு 51 ஓட்டங்களையும், குசல் மென்டிஸ் 23 பந்துகளுக்கு 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
148 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 149 ஓட்டங்களை பெற்று வெற்றிப்பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிகப்படியான ஓட்டங்களாக ஷாய் ஹோப் 54 பந்துகளுக்கு 65 ஓட்டங்களையும், பிரண்டன் கிங் 22 பந்துகளுக்கு 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது.



