Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் உள்ள தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி அமீர் கான் முட்டகை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தான் அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் நடைபெறும் தலிபான்கள் அரசை இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்கவில்லை. தற்போது அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியுடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments