ஆந்திராவில் அர்னாப் புயலால் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அர்னாப் புயலாக மாறியது.
இந்த புயல் 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா, கோதாவரி மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால் விசாகப்பட்டினத் தில் 20 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுப்பின. நள்ளிரவு 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே யானம் அருகே அர்னாப் புயல் கரையை கடக்கும் என வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125-135 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் பல இடங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


