Sunday, September 27, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டி - இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டி – இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட போட்டிகளில் மேலும் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

கலப்பு 10 மீற்றர் ஏர் பிஸ்டல் பிரிவில் சுருச்சி சிங் – கமல்ஜீத் இணை தங்கப் பதக்கம் வென்றதுடன், ஆடவர் 50 மீற்றர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் அணிப் பிரிவில் ஐஸ்வர்ய பிரதாப் சிங் தோமர், ருத்ராங்க்ஷ் பாட்டீல், நீரஜ் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

மேலும், மகளிர் குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் வெண்கலப் பதக்கமும், ஆடவர் 10,000 மீற்றர் ஓட்டத்தில் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

போல் வால்ட் போட்டியில் பரணிகா இளங்கோவன் வெண்கலப் பதக்கம் வென்று, அந்தப் பிரிவில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுக்கொடுத்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments