Wednesday, September 30, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஆரம்பமாகும் மல்யுத்தம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று ஆரம்பமாகும் மல்யுத்தம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டிகள் இன்று(30) ஆரம்பமாகியுள்ளன.

ஜப்பானின் ஐச்சி–நகோயாவில் நடைபெறும் 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தப் போட்டிகள் செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 3ஆம் திகதி வரை நடைபெறுகின்றன.

மொத்தம் 18 எடைப் பிரிவுகளில் Freestyle, Greco-Roman மற்றும் மகளிர் மல்யுத்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இன்று முதல் நாளில் ஆண்களுக்கான Greco-Roman 67kg, 87kg, 130kg மற்றும் மகளிருக்கான 68kg பிரிவுகள் நடைபெறுகின்றன.

தகுதிச்சுற்று, அரையிறுதி மற்றும் Repechage சுற்றுகளுக்குப் பின்னர், அதே நாளில் பதக்கச் சுற்றுகளும் இறுதிப் போட்டிகளும் நடைபெறுகின்றன.

இன்றைய போட்டிகளில் இந்தியாவின் சுனில் குமார் ஆண்களுக்கான Greco-Roman 87kg பிரிவில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளார். அவர் காலிறுதியில் முஹம்மத் சுல்தோன்சோடாவை 9–0 என வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

பின்னர் ஜப்பானின் Yoshida Taizo-விடம் 11–0 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கத்திற்கான Repechage வாய்ப்புக்குத் திரும்பியுள்ளார்.

மகளிர் 68kg பிரிவில் இந்தியாவின் Nisha Dahiya-வும் போட்டியிட்ட நிலையில், அவர் ஆரம்ப சுற்றிலேயே வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments