Friday, October 9, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமைதிக்கான நோபல் பரிசு - அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து வெளியான கருத்து

அமைதிக்கான நோபல் பரிசு – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து வெளியான கருத்து

2026 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது என ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஹாக்கான் ஜெர்லோ தெரிவித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த ஒக்டோபர் 5ம் திகதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 9 ஆம் திகதி அறிவிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிரான போர், சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மீதான விமர்சனங்கள் உள்ளிட்ட காரணங்களால், அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்புக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஹாக்கான் ஜெர்லோ (Håkon Jerlo), நோபல் பரிசு தேர்வில் ட்ரம்ப் ஒரு முக்கிய காரணியாக இருப்பார் என்றும், அவருக்கு பரிசு வழங்குவது நன்மையை விட தீமையை ஏற்படுத்துமா? என்பதையும் நோபல் குழு பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து அமைதியான மாற்றம் ஏற்படுவதற்காகவும் போராடியதற்காக மரியா மச்சாடோவுக்கு (Maria Machado) அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments