Monday, June 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்அமெரிக்காவில் M. R.I. இயந்திரத்தால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் மரணம்!

அமெரிக்காவில் M. R.I. இயந்திரத்தால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் மரணம்!

அமெரிக்காவில் நியூயோர்க் நகரத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றில் எம்.ஆர்.ஐ. (MRI) இயந்திரத்தால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கழுத்தில் உலோகத்தால் செய்யப்பட்ட பெரிய சங்கிலி அணிந்து எம்ஆர்ஐ இயந்திர அறைக்குள் சென்றுள்ளார்.

இதன்போது, இயங்கி கொண்டிருந்த இயந்திரத்தின் சக்திவாய்ந்த காந்தசக்தி அவரை அதற்குள் இழுத்துள்ளது. இதனால் 61 வயதுடைய வயோதிபர் உயிரிழந்துள்ளார்.

தனது கணவர் தான் இவ்வாறு இறந்து விட்டதாக உள்ளூர் ஊடகங்களுக்கு வைத்தியசாலை இருந்த நோயாளியான அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த பெண் நோயாளி தனக்கு முழங்காலில் எம்.ஆர்.ஐ. இயந்திரத்தில் பரிசோதனை செய்த பின்னர் எழும்புவதற்கு உதவுமாறு தனது கணவரை அந்த அறைக்குள் அழைத்துள்ளார்.

அவர் அனுமதி இன்றி சென்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த அவர் வியாழக்கிழமை ( 17) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான படங்களை உருவாக்க எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் வலுவான காந்தப்புலத்தைப் பயன்படுத்துகின்றன.

எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் அனைத்து வகையான காந்தப் பொருட்களையும் ஈர்க்கும் காந்த சக்தியை கொண்டுள்ளன.

உதாரணமாக சாவிகள், மொபைல் போன்கள் மற்றும் ஒட்சிசன் சிலிண்டர்களை கூட உள்ளீர்த்து எரிபொருட்களாக மாறி எம்.ஆர்.ஐ. இயந்திர்தை நோயாளி அல்லது மருத்துவ நிபுணர்களுக்கு காயம் ஏற்படலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டில் நியூயோர்க் நகரில் வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ அறையில் ஒட்சிசன் சிலிண்டர் வைக்கப்பட்ட நிலையில் 06 வயது சிறுவன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மண்டை ஓடு உடைந்து உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments