Wednesday, November 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஸ்டெல்லாண்டிஸ் தொழிற்சாலை விற்பனை: கனடா அரசாங்கத்தின் பங்களிப்பு அம்பலம்!

ஸ்டெல்லாண்டிஸ் தொழிற்சாலை விற்பனை: கனடா அரசாங்கத்தின் பங்களிப்பு அம்பலம்!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம் பிராம்ப்டனில் அமைந்துள்ள ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) கார் உற்பத்தித் தொழிற்சாலையை, கனேடிய கவச வாகன உற்பத்தி நிறுவனமான ரொஷெல் (Roshel) நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் மத்திய அரசாங்கம் தீவிரமாகப் பங்கேற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து நேரடித் தகவல்களைக் கொண்ட மூன்று தரப்பினர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த ஒப்பந்தம் தொடர்பான தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளின்போது, விற்பனைக்கு மத்திய அரசாங்கம் தடையாக இருக்கவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை பிராம்ப்டனில் அமைந்துள்ள தனது கார் உற்பத்தித் தொழிற்சாலையை ரொஷெல் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதாக அறிவித்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு முதல் குறித்த தொழிற்சாலை செயலற்ற நிலையில் காணப்படுவதுடன், அங்கு பணியாற்றிய 2,200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநீக்கத்துக்குப் பின்னரான ஊதியத்தைப் பெற்று வருகின்றனர்.

இந்தத் தொழிற்சாலையை மறுசீரமைத்து, வாகன உற்பத்தி மற்றும் பாதுகாப்புத்துறை சார்ந்த உற்பத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தவுள்ளதாக ரொஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், அதிகளவிலான பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனவும், முன்னுரிமை அடிப்படையில் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

எனினும், எத்தனை ஊழியர்கள் மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்பது தொடர்பில் இதுவரை தெளிவான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்தின் முடிவுக்கு கார்னி கடும் எதிர்ப்பு!

இதேவேளை, இந்த விற்பனை தொடர்பில் கனேடிய தொழில்துறை அமைச்சர் மெலனி ஜோலி தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

கனேடியப் பிரதமர் மார்க் கார்னி, இந்த விற்பனை நடவடிக்கையைத் தொழிலாளர்களுக்கும் கனடாவுக்கும் இழைக்கப்பட்ட துரோகம் என விமர்சித்துள்ளார்.

ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் பல்வேறு ஒப்பந்தங்களின் கீழ் கொண்டுள்ள கடப்பாடுகளை மீறியுள்ளதாகவும், தொழிலாளர்களின் நலன்களையும் கனடாவுக்கான தனது பொறுப்புகளையும் புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த ஒப்பந்தங்களின் கீழ் கனடாவுக்கு உள்ள உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments