Thursday, July 23, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ரூ.621 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமான பணி – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ரூ.621 கோடி மதிப்பீட்டில் மேம்பால கட்டுமான பணி – அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வாகனப் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது

சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 3.5 கி.மீ நீளமுள்ள நான்கு வழித்தட உயர்மட்ட மேம்பாலப் பணிகள் ரூ. 621 கோடி மதிப்பீட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 19.01.2024 அன்று தொடங்கி வைத்தார். இப்பணியின் முன்னேற்றத்தை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ. வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தற்போது 30% பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதை மற்றும் பிற இடங்களில் நடைபெறும் அடித்தள, மைக்ரோ பைல், ஜியோ சிந்தடிக் லேயர் மற்றும் வெல்டிங் பணிகளை விரைவாக முடிக்கவும், மழைக்காலத்திற்கு முன் அடித்தள பணிகள் நிறைவு பெறும் வகையில் வேகப்படுத்தவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பணிகள் நடைபெறும் இடங்களில் போக்குவரத்து காவல்துறை, மின் வாரியம், மாநகராட்சி, குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம், வனத்துறை ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து, பொதுமக்கள் இடையூறு இல்லாமல் பணிகள் நடைபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் நெடுஞ்சாலை துறையின் செயலாளர் செல்வராஜ், சிறப்பு தொழில்நுட்ப அதிகாரி சந்திரசேகர், தலைமை பொறியாளர் சத்ய பிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் சரவணன் செல்வம், கோட்ட பொறியாளர் சந்திரசேகர், ஒப்பந்ததாரர் ஜே.குமார் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் துறை சார்ந்த பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments