Friday, September 4, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி முதலமைச்சர் விஜய் வாழ்த்து

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தமிழக முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அநீதிக்கு எதிராக அறம் வெல்லும் என்றும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அன்பும் அறமும் நிறைந்த நல்லுலகை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்தில் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments