Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திவந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திவந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (19) உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில் காணப்பட்டுள்ளார்.

அதனையடுத்து, நண்பர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments