Sunday, October 4, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மூவரை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மூவரை கைதுசெய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணையொன்று தொடர்பில் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இவர்கள் தங்களது வசிப்பிடங்களிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், தகவல்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை 0718 592 167 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொண்டும் அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபர்கள் ராஜபக்ஷ பத்திரணகே ஹிமாலி செவ்வந்தி, ராஜபக்ஷ பத்திரணகே தரிந்து ஜீவந்த மற்றும் பத்தேகம பத்திரணகே விராஜ் நிமஷ்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments