Sunday, October 4, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மக்களின் உரிமைக் குரல்களை ஒன்றிணைக்க ‘சத்யாகிரகம்’ டிஜிட்டல் தளம் - ராகுல் காந்தி

மக்களின் உரிமைக் குரல்களை ஒன்றிணைக்க ‘சத்யாகிரகம்’ டிஜிட்டல் தளம் – ராகுல் காந்தி

மக்களின் உரிமைகளுக்காக தனித்தனியாக போராடி வரும் இளைஞர்கள், மாணவர்கள், விவசாயிகள், பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பெண்களின் குரல்களை ஒரே தளத்தில் ஒன்றிணைக்கும் வகையில் ‘சத்யாகிரகம்’ என்ற டிஜிட்டல் தளத்தை காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று (03) தொடங்கி வைத்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், நில உரிமை, பெண்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகள், கல்வி, தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்காக மக்கள் போராடி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனித்தனியாக எழும் குரல்கள் எளிதில் ஒடுக்கப்பட்டுவிடுவதால், அநீதிக்கு எதிராக போராடுபவர்கள் தங்களது விவரங்களை ‘சத்யாகிரகம்’ தளத்தில் பதிவு செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்களுக்கு ஆதரவளிப்பதுடன் பாராளுமன்றத்திலும், வீதிகளிலும், கடிதங்கள் மூலமாகவும் துணை நிற்பேன் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments