Friday, July 31, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

முதியோர் கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவித்தல்

70 வயதிற்கு மேற்பட்டோருக்கான முதியோர் கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குரிய அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேற்பட்ட 621,638 முதியவர்களுக்கு முதியோர் கொடுப்பனவாக 3,108,190,000.00 ரூபாய் தொகையும்,

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 77,324 முதியவர்களுக்கு முதியோர் கொடுப்பனவாக 386,620,000.00 ரூபாய் தொகையும் 2026.07.31 அன்று சம்பந்தப்பட்ட பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளன.

சம்பந்தப்பட்ட பயனாளிகள் தமது கொடுப்பனவுப் பணத்தை 2026 ஜூலை 31 ஆம் திகதி முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments