Wednesday, October 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

முச்சக்கரவண்டி விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை – வெதிகும்புர வீதியில் இன்று (28) காலை பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் அலியாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த சுமார் எட்டு வயதுடைய சிறுவர் உட்பட நால்வர் படுகாயமடைந்து மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொனராகலையிலிருந்து வெதிகும்புர நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், வெதிகும்புரவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மொனராகலை போக்குவரத்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments