நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில், ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘திருவிளையாடல்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மறுவெளியீடு செய்யப்படவுள்ளது.
ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பில் ஜி. லதா இந்த திரைப்படத்தை மறுவெளியீடு செய்யவுள்ளார்.
இதனை முன்னிட்டு ‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வியாழக்கிழமை, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காசினோ திரையரங்கில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் ஏ.பி. நாகராஜனின் மகன் ஏ.என். பரமசிவம், நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், நடிகர் மகேந்திரன், நடிகர் இளவரசு, நடிகை வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.


