Monday, September 7, 2026
spot_img
Homeபொது செய்திகள்மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை வென்ற தமிழ் பெண்!

மிஸ் வேர்ல்ட் பட்​டத்தை டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா (வயது 24), வென்றுள்ளார். ஸ்பெ​யினைச் சேர்ந்த எலிசபெத் 2 ஆம் இடத்​தை​யும், மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்ணான தனுசியா செட்டி 3 ஆம் இடத்​தை​யும் பிடித்​தனர்.

வியட்​நாமின் காங் ஹோவா மாகாணம், நியா ட்ராங் நகரில் கடந்த ஓகஸ்ட் 8 ஆம் திகதி மிஸ் வேர்ல்டு உலக அழகிப் போட்டி தொடங்​கியது. இதில் இந்​தி​யா​வைச் சேர்ந்த நிகிதா போர்​வால் உட்பட 111 நாடு​களைச் சேர்ந்த போட்​டி​யாளர்​கள் பங்​கேற்​றனர்.

மலேசியாவை சேர்ந்த தமிழ்ப் பெண்

 

அவர்​களுக்கு பல்​வேறு கட்​டங்​களாக போட்​டிகள் நடத்​தப்​பட்​டன. வியட்​நாமின் நியா ட்ராங் நகரில் நேற்று முன்​தினம் மாலை இறுதிப் போட்டி நடை​பெற்​றது. முதல்​கட்​ட​மாக 111 போட்டியாளர்களில் இருந்து 40 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர். இதில் இந்​தி​யா​வின் நிகிதா இடம் பெற்​றிருந்​தார். அதன்​பிறகு 20 பேர் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

ஆனால் அந்​தப் பட்​டியலில் இந்​திய அழகி இடம்​பெற​வில்​லை. அடுத்த கட்​ட​மாக 12 போட்​டி​யாளர்​கள் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டனர். அவர்​களில் இருந்து 6 பேர் தேர்வு செய்யப்​பட்​டனர். நள்​ளிர​வில் முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன.

அப்​போது டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹேரி மோலா முதலிடத்​தைப் பிடித்து ‘மிஸ் வேர்ல்​டு’ உலக அழகி பட்​டத்தை வென்​றார். அவருக்கு கடந்த ஆண்டு பட்​டம் வென்ற தாய்​லாந்​தின் ஓபல் சுசாடா மகுடம் சூட்​டி​னார். ஸ்பெ​யின் நாட்டை சேர்ந்த எலிசபெத் ரெய்​னெஸ் (வயது 22) இரண்​டாவது இடம் பிடித்​தார். மலேசி​யா​வைச் சேர்ந்த தனுசியா செட்டி (வயது 25) மூன்​றாம் இடத்தைப் பெற்​றார்.

அவரது தாய்​மொழி தமிழ் ஆகும். அவரது தந்தை வீர​பாண்​டியன். 14 வயதில் தாயை இழந்த தனுசியா தந்தை​யின் அரவணைப்​பில் வளர்ந்​தார். அவர் கொடுத்த ஊக்கத்தால் மிஸ் மலேசியா பட்​டம் வென்​று, மிஸ் வேர்ல்டு போட்டி​யில் நுழைந்​தார்.

வியட்​நாமில் நடை​பெற்ற மிஸ் வேர்ல்டு போட்​டி​யின்​போது ஆங்​கிலம், மலாய், மாண்​டரின், தமிழ் ஆகிய 4 மொழிகளில் தனுசியா சரள​மாக பேசி​னார். “மாற்​றம் என்​பது நமக்​குள் இருந்தே தொடங்க வேண்​டும்” என்று அவர் 4 மொழிகளில் பேசிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments