மின்சக்தி பரிமாற்ற 7 உப நிலையங்களில் பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்ட மின்கலங்கள், களஞ்சியப் பொறிமுறைக்காக கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மின் சக்தியை நிலையானதாக அமைத்து நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட மின்கல வலுசக்தி களஞ்சிய பொறிமுறைத் திட்டத்தில் மேலும் ஏழு பொறிமுறைகள் நேற்று மாலை கொழும்பு துறைமுகத்திற்கு கிடைக்கப்பெற்றதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வலுசக்தி களஞ்சிய பொறிமுறைகள் ஏழும் பாணந்துறை, பெலியத்தை, ஹம்பாந்தோட்டை, அம்பாறை, வவுண தீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேசங்களில் உள்ள மின்சக்தி பரிமாற்ற உபநிலையங்களை அண்மித்து பொருத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பொறிமுறை ஏழும் 280MW அளவிலான மின் சக்தியை சேமித்து வைக்க கூடியது என்றும், அன்றாட 70MW தேசிய மின்சக்தி வளையமைப்பிற்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


