Saturday, November 21, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாநில உரிமைகள், சமூகநீதியைப் பாதுகாக்க திராவிட இயக்கத்தின் தேவை அதிகரித்துள்ளது – மு.க.ஸ்டாலின்

மாநில உரிமைகள், சமூகநீதியைப் பாதுகாக்க திராவிட இயக்கத்தின் தேவை அதிகரித்துள்ளது – மு.க.ஸ்டாலின்

நீதிக்கட்சி தினத்தை முன்னிட்டு, திராவிட இயக்கத்தின் முக்கியத்துவம் முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதாக தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட அநீதிகளைத் தகர்ப்பதற்காகவே நீதிக்கட்சி உருவாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதைக் கொள்கை, பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய மாநில உரிமைகள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி ஆகியவற்றின் ஊடாக திராவிட இயக்கம் வளர்ச்சியடைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த இயக்கம் தமிழகத்தின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியமைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள் மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயற்சிக்கும் சூழல் காணப்படுவதாகத் தெரிவித்த ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் தேவை தற்போது முன்னெப்போதையும் விட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்பட்ட உரிமைகளை ஓர் ஆட்சியின் தவறுகளுக்காகப் பலிகொடுத்துவிடக் கூடாது என்றும் அவர் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments