மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திமிலத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த ஆசிரியர் மீது கனரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து கனரக வாகனத்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
58 வயதுடைய கமலநாதன் மதிவதனன் என்ற ஆசிரியரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


