Wednesday, September 30, 2026
spot_img
Homeஉலக செய்திகள்போர்க்களத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்

போர்க்களத்தில் மனிதர்களுக்குப் பதிலாக ரோபோக்கள்

ரஷ்யாவுடனான போரில் மனித வீரர்களின் உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்கும் நோக்கில், உக்ரைன் இராணுவம் Army of Robots திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், போர்க்களத்தின் முன்வரிசையில் (Frontline) மனிதர்களுக்குப் பதிலாக ரிமோட் மூலம் இயங்கும் தரைவழி ரோபோக்கள் (UGVs) மற்றும் ஆளில்லா வாகனங்கள் களமிறக்கப்படுகின்றன.

இவை எதிரிகளின் நிலைகளைத் தாக்குதல், ஆபத்தான பகுதிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் உணவுகளைக் கொண்டு சேர்த்தல், காயமடைந்த வீரர்களை மீட்பது மற்றும் கன்னிவெடிகளை அகற்றுதல் போன்ற பல பணிகளை மேற்கொள்கின்றன.

சமீபத்தில் நிலத்திலும் நீரிலும் பயணித்து 40 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்குப் பொருட்களை விநியோகித்த புதிய நீர்நில வாழ் ரோபோக்கள் உட்பட பல நவீனத் தொழில்நுட்பங்களை உக்ரைனின் ‘Brave1’ பாதுகாப்பு மையம் இதற்காகப் பயன்படுத்தி வருகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments