Friday, November 27, 2026
spot_img
Homeகனடா செய்திகள்பொதுமக்கள் குடும்பங்களைப் பாதுகாக்கத் எதிர்த்துப் போராட வேண்டும் – முதல்வர் டக் ஃபோர்ட்

பொதுமக்கள் குடும்பங்களைப் பாதுகாக்கத் எதிர்த்துப் போராட வேண்டும் – முதல்வர் டக் ஃபோர்ட்

ஒன்ராறியோ (Ontario) மாகாணத்தில் அண்மையில் அதிகரித்து வரும் வீடு புகுந்து தாக்குதல் சம்பவங்களைக் கட்டுப்படுத்தச் சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Doug Ford), பொதுமக்கள் தமது குடும்பங்களைப் பாதுகாக்கத் “எதிர்த்துப் போராட வேண்டும்” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ரொறன்ரோவின் (Toronto) மத்திய பகுதியில் வீடொன்றில் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 39 வயதான இசைக் கலைஞர் மைக்கேல் எக்கர்ட் (Michael Eckert) சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து, குயின்ஸ் பார்க்கில் (Queen’s Park) செய்தியாளர்களிடம் பேசிய போதே ஃபோர்ட் இக்கருத்தை வெளியிட்டார்.

சட்டபூர்வமாகத் துப்பாக்கி வைத்திருப்பவர் என்ற முறையில், தமது வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயற்சிப்பவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் செய்யத் தயங்கப் போவதில்லை எனத் தெரிவித்த ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட், துப்பாக்கி இல்லாதவர்கள் தங்களையும் தமது குழந்தைகளையும் பாதுகாக்கக் கத்திகள் அல்லது பேஸ்பால் மட்டைகளைப் பயன்படுத்தலாம் எனக் கூறினார்.

“ஒளிந்து கொள்ளாமல், எதிர்த்துப் போராட எந்தவொரு கருவியையும் பயன்படுத்துமாறு மக்களை தாம் ஊக்குவிப்பதாக” அவர் குறிப்பிட்டார்.

மேலும், வன்முறைக் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதைக் கடுமையாக்குமாறும், கட்டாயச் சிறைத் தண்டனைக் காலத்தை அதிகரிக்குமாறும் மத்திய அரசாங்கத்தை ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments