வானில் நாளை (24) அரிய வானியல் நிகழ்வான ‘பீவர் சூப்பர் மூன்’ (Beaver Supermoon) எனப்படும் பிரமாண்ட முழு நிலவு தோன்றவுள்ளது.
இந்திய நேரப்படி இரவு 8.23 மணியளவில் நிலவு தனது முழுமையான ஒளியை அடையும் என வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சூரியன் மறைந்த பின்னர் கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போது இந்த நிகழ்வை மிகவும் தெளிவாகக் காண முடியும்.
நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில், சுமார் 3 இலட்சத்து 60 ஆயிரத்து 765 கிலோமீற்றர் தொலைவில் வருவதால், வழக்கமான முழு நிலவை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் தோன்றும் முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் மூன்’ என அழைக்கப்படுகிறது. குளிர்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நீர்நாய்கள் தங்களின் இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலப்பகுதியுடன் தொடர்புபடுத்தியே இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் அடுத்தடுத்த சூப்பர் மூன் நிகழ்வுகளில் இதுவே முதலாவது நிகழ்வாகும்.
இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண தொலைநோக்கி போன்ற விசேட உபகரணங்கள் எதுவும் தேவையில்லை. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே இதனைப் பார்வையிட முடியும்.
இதேவேளை, இதனைத் தொடர்ந்து எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதியும் மற்றுமொரு சூப்பர் மூன் தோன்றவுள்ளதாக பிர்லா கோளரங்க வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


