தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 8.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இன்று (23) வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் 8.1 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம், ஒக்டோபரில் 8.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதேவேளை, உணவுப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 6.9 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், ஒக்டோபரில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.
உணவல்லா பணவீக்கமும் 9.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


