Saturday, November 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தாய்லாந்து துணைப் பிரதமர் இன்று நாட்டிற்கு விஜயம்!

தாய்லாந்து துணைப் பிரதமர் இன்று நாட்டிற்கு விஜயம்!

தாய்லாந்து இராச்சியத்தின் துணைப் பிரதமரும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான சிஹசாக் புவாங்கெட்கேவ் இன்று (20) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

தாய்லாந்து மன்னர் மஹா வஜிராலொங்கோர்னின் விசேட அரச பிரதிநிதியாக வருகை தரும் அவர், நாளை (21) கண்டி அஸ்கிரிய மகா விகாரையில் நடைபெறவுள்ள அரச கதின நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத்துடனும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மேலும், இலங்கை மற்றும் தாய்லாந்து இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளது.

இந்த ஒப்பந்தம் இரு நாடுகளின் மக்களுக்கிடையிலான பயணங்களை இலகுவாக்கி, சுற்றுலா மற்றும் மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாக அமையும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments