Monday, June 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ – அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’ – அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி வைத்துள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்க முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் 2026ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் பேசியிருக்கிறார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் வருவதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா? அதேபோல பாமக மற்றும் இதர சிறு கட்சிகள் கூட்டணிக்கு வரும

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments