கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிடியாணை மூலம் கைது செய்யப்பட்டிருந்த ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த பின்னர், வழக்கை ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.


