சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 பிஎச்கே திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். சித்தார்த்தின் தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத்குமா ர், தேவயாணியும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.


