Wednesday, November 25, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கியூபெக்கில் 75 மீற்றர் தொலைத்தொடர்பு கோபுரம்

கியூபெக்கில் 75 மீற்றர் தொலைத்தொடர்பு கோபுரம்

கியூபெக் மாகாணத்தில் உள்ள லோரென்ஷியன்ஸ் (Laurentians) பிராந்தியத்தில் 75 மீற்றர் உயரமான தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்றை அமைப்பதற்கு ‘பெல்’ (Bell) நிறுவனத்திற்கு பிரெவோஸ்ட் (Prévost) நகர சபை உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

இந்தக் கோபுரமானது, தமது நகரின் இயற்கை அழகை சீரழிக்கும் எனத் தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இதற்கு எதிரான தமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரெவோஸ்ட் மற்றும் அயல் நகரமான செயின்ட்-ஆன்-டெஸ்-லாக்ஸ் (Sainte-Anne-des-Lacs) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடிமக்கள் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்தக் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்காக நகராட்சிக்குச் சொந்தமான காணியை ‘பெல்’ நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விடவோ அல்லது விற்பனை செய்யவோ கூடாது என வலியுறுத்தி 1,500-க்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டிருந்தது.

மேலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வர்த்தக அல்லது கைத்தொழில் வலயத்திற்கு இக்கோபுரத்தை மாற்றுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

எனினும், மக்களின் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டு, கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற நகர சபைக் கூட்டத்தில், இத்திட்டத்திற்கு ஆதரவாக ஆட்சேபனை இல்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இத்திட்டத்திற்கு எதிராகத் தமது குரலைத் தொடர்ந்து எழுப்பப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments