Monday, July 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காணிகளை உடனே விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் தொடரும் போராட்டம்!

காணிகளை உடனே விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் தொடரும் போராட்டம்!

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி பலாலி சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கடந்த 36 வருடங்களாகக் காணிகளை இழந்த மக்கள், இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த நிலங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களின் காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்துத் தமது சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றமையால், தாம் நீண்ட காலமாக வீடுகள் மற்றும் நிலங்கள் அற்று நிர்க்கதியாக வாழ்ந்து வருகின்றனர் என்று அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments