Thursday, October 8, 2026
spot_img
Homeகனடா செய்திகள்காணாமல்போன 6 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு: பொலிஸார் உறுதி

காணாமல்போன 6 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்பு: பொலிஸார் உறுதி

கனடாவின் மிசிசாகா நகரின் போர்ட் கிரெடிட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போன விட்பி பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி லேக்சோர் வீதி கிழக்கு மற்றும் எலிசபெத் வீதி தெற்கு பகுதிகளுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00 மணியளவில் கடைசியாகக் காணப்பட்டிருந்தார்.

சிறுமியைக் கண்டுபிடிப்பதற்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் பொலிஸார் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த சிறுமியை கண்டு பிடிப்பதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் மற்றும் விசாரணைகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments