Wednesday, September 23, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம்: குவியும் தபால் வாக்குகள்

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம்: குவியும் தபால் வாக்குகள்

Alberta referendum mail-in ballot applications surpass 610,000: கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000 ஐத் தாண்டியுள்ளது.

கனடாவிலிருந்து ஆல்பர்ட்டா மாகாணம் பிரியும் விவகாரம் தொடர்பில் அடுத்த மாதம் பொது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பு தொடர்பில் வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை 610,000ஐத் தாண்டியுள்ளதாக ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமையிலிருந்து வந்துள்ள தபால் வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 90,000 அதிகரித்துள்ள நிலையில், அக்டோபர் 19 அன்று நடைபெறவிருக்கும் பொது வாக்கெடுப்பிற்காக தபால் மூலம் வாக்களிப்பதில் மக்களின் ஆர்வம் அதிகரித்து வருவதையே இது காட்டுவதாக கருதப்படுகிறது.

தபால் வாக்குகள், அக்டோபர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்று ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலேயே நீடிக்க வேண்டுமா, அல்லது நாட்டிலிருந்து பிரிவது குறித்து இரண்டாவதாக ஒரு பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்பதை ஆல்பர்ட்டா மக்கள் தீர்மானிக்கவுள்ள இந்த வாக்கெடுப்பில், வரலாறு காணாத எண்ணிக்கையில் வாக்காளர்கள் பக்கேற்பார்கள் என ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.

ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையத்தைப் பொருத்தவரை, இந்த வாக்கெடுப்பு ஒரு மாபெரும் பணியாகும். அதற்காக 28,000க்கும் மேற்பட்டோரைப் பணியமர்த்தியுள்ளதாகவும், சுமார் 52,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாகவும் ஆல்பர்ட்டா தேர்தல் ஆணையம் கூறுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments