Wednesday, September 23, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இலங்கை தொடரிலிருந்து விலகினார் அடில் ரஷீத்

இலங்கை தொடரிலிருந்து விலகினார் அடில் ரஷீத்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் அடில் ரசீத் காயம் காரணமாக முழுமையாக விலகியுள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. ரி20 தொடர் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் செப்டம்பர் 22ஆம் திகதி ஆரம்பமானது.

ரி20 தொடரின்போது அடில் ரசீத்தின் வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்தும் அவர் விலகியுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

அடில் ரசீத் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து அணியின் முக்கிய சுழற்பந்துவீச்சாளராக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதல் ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் பதினொருவர் குழுவில், அடில் ரசீத்துக்குப் பதிலாக ரிஹான் அகமது இடம்பெற்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments