இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 380,000 புதிய நிரந்தரக் குடியிருப்பாளர்களை கனடாவுக்குள் அனுமதிப்பதே இலக்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பொருளாதாரக் குடிவரவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திறமையான தொழிலாளர்கள், மாகாண நியமனத் திட்டத்தின் ஊடாக விண்ணப்பிப்பவர்கள் மற்றும் பிராந்திய குடிவரவு திட்டங்களின் கீழ் தகுதி பெறுவோருக்காக ஆண்டுக்கு 244,700 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும், ஏற்கனவே கனடாவில் தற்காலிக வதிவிட அனுமதியுடன் வாழ்ந்து வரும் தகுதியானவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
சர்வதேச மாணவர்கள், தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் திறமையான பணியாளர்களுக்கான குடிவரவு வழிமுறைகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.


