Monday, June 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! – காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில்,

“பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்தே தமிழ்நாட்டையும், தமிழர்களையும் ஜனநாயக விரோதத் திட்டங்கள் மூலம் வஞ்சித்து வருகிறது.

இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை, புயல், வெள்ளம் பாதித்த தமிழ்நாட்டின் மாவட்டங்களுக்கு பேரிடர் நிதி ஒதுக்காதது, தமிழ்நாட்டிற்கு பள்ளிக்கல்விக்காக ஒதுக்கிய நிதியை வழங்காமல் இருப்பது,

உயிர்கொல்லி நீட் தேர்வால் அன்றாடம் தற்கொலைகள் அதிகரித்து வருவது, இந்த கொடிய தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்காதது,

மாநில திட்டங்களுக்கு மத்திய நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவது, தமிழ்நாட்டிலிருந்து அதிகமான ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்தபோதும் நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது,

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பது,சென்னை மெட்ரோ 2- ம் கட்டத்திற்கான நிதியை தாமதப்படுத்துவது,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை, மகாத்மா காந்தி பெயரில் இருப்பதால் என்னவோ இத்திட்டதை முடக்க நினைக்கின்றது. அவ்வகையில் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ. 4,034 கோடியை தராமல் கிராமப்புற மக்களின் வாழ்வில் விளையாடுகிறது மத்திய அரசு.

இதுபோன்ற காரணங்களால் தமிழ்நாட்டிற்கு ஏப்ரல் 6 ஆம் தேதி வருகை தரும், பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் மற்றும் எனது தலைமையில் சென்னையில் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளாது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments