பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இவரது இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ’எஸ்கே 27’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.
இந்த நிலையில், சிறந்த படத்திற்கான தேசிய விருது பார்க்கிங் படத்திற்கு வழங்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் விருதை பெற்றுக்கொண்டார்.
பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்தப் படத்துக்கு தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருதையும், சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பார்க்கிங் பெற்றது குறிப்பிடத்தக்கது.


