உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிந்த நிலையில் இந்தியா இந்த பின்னடைவை சந்தித்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்தியாவின் புள்ளி சதவீதம் 51.52 இல் இருந்து 50 ஆக குறைந்துள்ளது. 12 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்வி, 3 சமநிலையுடன் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நவம்பர் 27 ஆம் திகதி கிறைஸ்ட்சர்ச்சில் ஆரம்பமாகவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றியை நோக்கி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெலிங்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 368 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 720 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 352 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, நியூசிலாந்தின் 2வது இன்னிங்சில் 119 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியை எதிர்நோக்கியது.
ஆனால், நியூசிலாந்து அணி 239 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தநிலையில், போட்டி சமநிலையில் முடிந்தது.


