ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, உலகக் கிண்ண வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் குழு J இற்கான லீக் போட்டியில் ஆர்ஜென்டினா மற்றும் ஆஸ்திரியா அணிகள் மோதின.
இந்த போட்டியின் 38ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி ஆர்ஜென்டினா அணிக்காக முதல் கோலை அடித்தார்.
இதன் மூலம், தனது 17ஆவது கோலைப் பதிவு செய்து, உலகக் கிண்ண தொடர்களில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
அத்துடன் ஆட்டத்தின் 90+5 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் மெஸ்ஸி அடித்து உலகக் கிண்ண வரலாற்றில் தனது 18ஆவது கோலைப் பதிவு செய்தார்.
38 வயதாகும் லியோனல் மெஸ்ஸி, இந்த வரலாற்று சாதனை மூலம் சர்வதேச கால்பந்து உலகில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் நிரூபித்துள்ளார்.



