Friday, November 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்; நவம்பர் 8 ஆம் திகதி அறிவிப்பு!

இஸ்ரேலில் ஆட்சி மாற்றம்; நவம்பர் 8 ஆம் திகதி அறிவிப்பு!

வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதற்கான அழைப்பை அறிவிக்க உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த அக்.27-ம் தேதி நடைபெற்றது. இதில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 53 இடங்களும், காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 48 இடங்களும், அரபுக் கட்சிக்கு 19 இடங்களும் கிடைத்தன.

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்ஸாக் கூறுகையில் , கடசிகளுடன் இடம்பெற்ற ஆலோசனையில் நடந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் யாருக்கு அரசாங்கம் அமைக்கும் திறன் உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டப்படி என்னிடம் உள்ளது.

அரசியல் கூட்டணிகளுக்கு இடையில் நிலவும் விருப்பு வெறுப்புகளைப் பார்க்கும் போது இந்த விவகாரம் அவ்வளவு தெளிவாக இல்லை . சில அரசியல் கட்சித் தலைவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியே அதை தீர்மானிப்பேன்” என தெரிவித்துள்ளார்.

எந்தக் கட்சியால் 61 சீட் சேர்க்க முடியும் என்று அதிபர் கருதுகிறாரோ அந்தக் கட்சி ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பார். பெரும்பாலும் அதிக சீட் வாங்கும் கட்சித் தலைவருக்கு தான் அந்த அழைப்பு விடுக்கப்படும். ஆனால், சில நேரங்களில் 2-வது இடம்பெறும் கட்சியைக் கூட அதிபர் ஆட்சியமைக்க அழைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறாக அழைக்கப்படுபவருக்கு 28 நாட்களும், தேவைப்பட்டால் அதன் பின்னர் கூடுதலாக 14 நாட்களும் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்குவார். ஒருவேளை அந்தக் கட்சியால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாவிட்டால் மற்றொரு கட்சிக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும்.

அவரும் நிரூபிக்காவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட 61 எம்.பி.க்கள் ஒன்றிணைந்து பொதுவாக ஒருவரை கைகாட்டினால் அவர் தலைமையில் அரசமைக்க அவகாசம் வழங்கப்படும். எதுவுமே ஒத்துவராத பட்டத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments