Friday, November 6, 2026
spot_img
Homeஉலக செய்திகள்30 ஆண்டுகளில் இல்லாத பேரிழப்பு

30 ஆண்டுகளில் இல்லாத பேரிழப்பு

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் உள்ள கடற்கரை ஒன்றில் 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் ஒரே நேரத்தில் கரை ஒதுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தின் வைராபரா பிராந்தியத்திலுள்ள ங்காயி கடற்கரைப் பகுதியில், 50-க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கூட்டமாக கரையை நோக்கி வந்துள்ளன.

அங்குள்ள கூர்மையான பாறைகளுக்கு இடையே சிக்கியதால் அவை கடுமையான காயங்களுக்கு உள்ளாகின.

தகவல் அறிந்த அதிகாரிகளும், ‘புராஜெக்ட் ஜோனா’ தன்னார்வ மருத்துவக் குழுவினரும், உள்ளூர் மாஓரி பழங்குடியின மக்களும் இணைந்து திமிங்கலங்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

எனினும், பாறைகளில் மோதிய காயங்களாலும், நீர்ச்சத்து குறைவாலும் பெரும்பாலான திமிங்கலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன.

உயிரிழந்த திமிங்கலங்களுக்கு உள்ளூர் மாஓரி மக்கள் தங்கள் பாரம்பரிய பிரார்த்தனைகளைச் செலுத்தி, அவற்றை அடக்கம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த மிகப்பெரிய திமிங்கல உயிரிழப்பு இதுவெனக் கடல்சார் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments