Tuesday, September 22, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இலங்கையின் கடவுச்சீட்டு உலகளவில் 169ஆவது இடம்!

இலங்கையின் கடவுச்சீட்டு உலகளவில் 169ஆவது இடம்!

இலங்கையின் கடவுச்சீட்டு உலகளவில் 169ஆவது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பயணங்களுக்கான விசா அணுகலைக் கண்காணிக்கும் சுயாதீன தளமான Passport Reports வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கடவுச்சீட்டுக்கான Mobility Score 53 ஆகும். இதன்படி, இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 15 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். மேலும் 34 நாடுகளுக்கு வருகையின்போது விசா (Visa on Arrival) பெறும் வசதியும், 4 நாடுகளுக்கு மின்னணு பயண அங்கீகாரம் (ETA) மூலம் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

எனினும், 145 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா பெற வேண்டிய நிலை காணப்படுவதாக Passport Reports தெரிவித்துள்ளது.

பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா 131ஆவது இடத்திலும், சீனா 97ஆவது இடத்திலும், ரஷ்யா 75ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 183ஆவது இடத்திலும் உள்ளன.

இலங்கைக்கு அருகிலுள்ள தரவரிசையில் மியான்மர் 168ஆவது இடத்திலும், நேபாளம் 171ஆவது இடத்திலும், எத்தியோப்பியா 173ஆவது இடத்திலும் உள்ளன.

உலகளவில் முதலிடத்தில் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளது. தொடர்ந்து சிங்கப்பூர் 2ஆவது இடத்திலும், ஸ்பெயின் 3ஆவது இடத்திலும், மலேசியா 4ஆவது இடத்திலும், லக்சம்பர்க் 5ஆவது இடத்திலும் உள்ளன. பிரான்ஸ் 6ஆவது இடத்திலும், நோர்வே 7ஆவது இடத்திலும் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

Passport Reports தன்னை உலகளாவிய பயணச் சுதந்திரம் மற்றும் கடவுச்சீட்டு வலிமை தொடர்பான தரவுகளை வழங்கும் சுயாதீன தளமாகக் குறிப்பிடுகிறது. விசா இல்லாத பயணம், வருகையின்போது விசா, ETA மற்றும் முன்கூட்டியே விசா தேவைப்படும் நாடுகள் என தனித்தனியாக தரவுகளை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு கடவுச்சீட்டின் பயண அணுகலை விளக்குவதாக அந்தத் தளம் தெரிவிக்கிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments